விஜய்யின் தளபதி-63யில் இப்படியொரு சூப்பரான விஷயம் உள்ளதா! அப்போ மாஸ் தான்!

0
364

தெறி, மெர்சல் திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்- அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் தற்போது விஜய் இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் எனவும், ஒரே காட்சியில் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களாக தோன்றுவார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous article15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு! வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்!
Next articleஇனி நீங்கள் ஒரு நாளைக்கு 25 கப் காபி குடிக்காலம் – ஆய்வில் வெளிவந்த தகவல்!