விசேஷங்களுக்கு கட்டப்படும் வாழைமரம்! இதற்கும், குருவிற்கும் என்ன சந்பந்தம்!

0

இந்தியா என்பது பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும் நிறைந்திருக்கும் ஒரு நாடாகும். இங்கு ஒவ்வொரு மதத்திற்கும் என பல சடங்குகளும், வழிபாட்டு முறைகளும் இருக்கிறது. குறிப்பாக இந்து மதத்தில் எண்ணற்ற பழக்கவழக்கங்களும், சடங்குகளும் உள்ளது.

கிட்டதட்ட அனைத்து சடங்குகளிலும், வழிபாடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்றால் அது வாழைதான். சொல்லப்போனால் பல சடங்குகள் வாழைமரத்தை வழிபட்ட பிறகே நடத்தப்படுகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழைமரம்

அறிவியல்ரீதியாக பார்த்தால் வாழைமரம் மரமே அல்ல, ஆனால் அதன் பலன்கள் மற்றும் அமைப்பிற்காக அது மரமாக கருதப்படுகிறது. வாழை மரம் அது வழங்கும் அற்புத பலன்களால் மிகவும் புனிதமான மரமாக கருதப்படுகிறது. வாழை மரமோ அல்லது வாழை இலைகளோ இல்லாத விசேஷங்களை பார்க்கவே முடியாது.

குரு

பழங்கால வேத நூல்களின் படி வாழை மரம் என்பது தேவர்களின் குருவான பிரஜாபதியை பிரதிபலிப்பதாகும். மேலும் இது குருவின் அருளை பெற்றுத்தரக்கூடியதாகும். குருவின் பிரதிபலிப்பாகவும் வாழைமரம் வேதங்களில் கூறப்படுகிறது.

வீட்டில் இருக்கும் குரு

இந்த நம்பிக்கை மிகவும் பிரபலமானது. பிரஜாபதி இரத்தின கல்லை அணிய முடியாதவர்கள் வாழைமர வேரை அணியலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் வீட்டில் வாழை மரம் இருப்பது உங்கள் வீட்டிலேயே குருவை வைத்திருப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது.

வாழை இலை புனிதமானது

இலைகளிலேயே மிகவும் புனிதமான இலையாக வாழை இலை கருதப்படுகிறது. அதனால்தான் அனைத்து சடங்குகளிலும் வாழை இலையில் கடவுளுக்கு படையல் வைக்கப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் வாழைப்பழம் ஆற்றலின் உறைவிடமாகும், அதனால்தான் அது முக்கனிகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் இது அனைவரும் வாங்கக்கூடிய விலையில்தான் இருக்கிறது.

மகாவிஷ்ணு

குருவிற்கு உரிய தட்சணை வழங்க முடியாதவர்கள் குருவிற்கு வாழைப்பழத்தில் சொற்ப பணத்தை வைத்து கொடுக்கலாம் என்று வேதங்கள் கூறுகிறது. அனைத்து விசேஷங்கள் வீட்டிலும் வாசலில் வாழைமரம் நிச்சயமாக இருக்கும். அதற்கு காரணம் வாழைமரம் மகாவிஷ்ணு வசிக்கும் இடங்களில் ஒன்றாகும். காக்கும் கடவுளான விஷ்ணு உடன் இருப்பது குடும்பத்திற்கு நல்லதுதானே. வியாழக்கிழமைகளில் வாழைமரத்தை வழிபடுபவர்கள் குருபகவானின் அருளை எளிதில் பெறலாம்.

வாழைப்பழம்

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு மகாவிஷ்ணு மாறும் லட்சுமிக்கு வாழைப்பழத்தை வைத்து வழிபட வேண்டும். இது உங்கள் குடும்பத்தில் இருக்கும் பணப்பிரச்சினைகளையும், குழப்பங்களையும் தீர்த்து குடும்ப மகிழ்ச்சியை உறுதி செய்யும்.

மாங்கல்ய தோஷம்

இது மிகவும் பிரபலமான சடங்காகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் வாழை மரத்தை திருமணம் செய்து கொள்வது அவர்களின் தோஷத்தை சரிசெய்யும். அதன்பின் மாங்கல்ய தோஷம் இல்லாதவர்களை கூட அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

வாழை இலைகள்

இளம் இலைகள் தீக்காயம் மற்றும் சரும பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தபட்டு வருகிறது. இதன் வேர் செரிமானக்கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை சரிபண்ண பயன்படுகிறது. மேலும் இதன் அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிவபெருமானுக்கு எப்படி வில்வ இலைகள் வைத்து வழிபடுவது நல்லதோ அதேபோல விநாயகருக்கு வாழை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

Previous articleமுடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, முடி உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள்.
Next articleஎன் செல்லத்தின் உயிரை பறிக்கவா பெட்டியை கொண்டு வந்தேன்! விளையாட்டாக வந்த விதி! தாயின் கதறல்!