விசேட அதிரடிப்படையினரிடம் கைவசமாகும் சிறைச்சாலைகள்!

0

கொழும்பிலுள்ள வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகளை பொலிஸ் அதிரடிப் படை பிரிவினரிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சு குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் விசாரணைகளுக்காக அடுத்த மாதம் முதல் விசேட அதிரடிப்படையினரிடம் சிறைச்சாலைகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலையிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் 10 பேர் விசேட அதிரடிப்படையினரின் உதவிக்காக நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleக.ரு.வி.ல் தி.ரு.ந.ங்.கை.க.ள் உருவாக இதுவா காரணம்!
Next articleதமிழ் சிறுவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை! மதம் மாறச்சொல்லி தொடர்ச்சியாக அழுத்தம்!