விக்ரத்தின் மகன் துருவ் நடித்துள்ள திரைப்படம் ‘ஆதித்யா வர்மா’!
தமிழ் சினிமாவில் பல படங்கள் ரீமேக் ஆகி உள்ளது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தை தமிழில் அமைந்த செய்து “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கிரிசாயா என்பவர் தான் ஆதித்ய வர்மா படத்தை இயக்கியவர். மேலும்,ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ரதன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், பனிதா சந்து,ராஜா,அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.
கதைக்களம்:
தமிழ் சினிமாவில் எப்போதும் காதல் படங்களுக்கு பஞ்சமே இல்லை. மேலும்,எல்லா படத்திலும் காட்சிகள் தான் மாறிக் கொண்டிருக்கிறது தவிர காதல்கள் எல்லாம் ஒன்று தான். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தான் தமிழில் ஆதித்ய வர்மா என்று ரீமேக் செய்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, ஹிந்தியில் ‘கபீர் சிங்’ என பல மொழிகளில் வெளியான படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள். இந்த படம் உண்மைக் காதல் உணர்வுகளையும், வலிகளையும் அழகாக எடுத்துச் சொல்கிற கதை ஆகும். மேலும்,காதலில் இருக்கும் வெறித்தனம், பாசம், ஏமாற்றினால் அடையும் வெறுப்பு ஆகிய ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார் இயக்குனர். மேலும்,இது ஜாதி பிரச்சனையும், ஜாதியால் பிரியும் காதலர்களை குறித்து சொல்லும் படம் ஆகும்.
பிறந்து 15 நாளில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவிட்ட சுஜா. துருவ் விக்ரம் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜன் படிப்பு படித்து வருபவர். அப்போது கல்லூரியில் முதலாமாண்டு மாணவியாக வருபவர் தான் பனிதா சந்து. இவரை முதலில் பார்க்கும் போதே காதலில் விழுந்து விடுகிறார் நம்ம ஹீரோ. அதோடு காதல் என்று சொன்னால் சாதாரண காதல் அல்ல, வெறித்தனமான காதல் என்று சொல்லலாம். மேலும்,இந்த படத்தில் காதலுக்கும், முத்தங்களுக்கு மசாலாகளுக்கும் பஞ்சமில்லை. மேலும், எம்.எஸ். படிப்பை முடித்த பின் பனிதா வீட்டிற்குச் சென்று தங்களுடைய காதலை பற்றி சொல்கிறார் துருவ். ஆனால், பனிதா அப்பாவோ ஜாதி வெறி பிடித்தவர்.
திருமணம் செய்தால் அவர் ஜாதி பையனை தான் திருமணம் செய்வேன் என்று துருவை அவமானப்படுத்தி வெளியே துரத்தி விடுகிறார். மேலும், பனிதாவிற்கு உடனடியாக வேறொரு திருமணத்தையும் செய்தும் வைக்கிறார்கள். இதனால், காதலியை பிரிந்த சோகத்தில் பயங்கர குடிகாரராகவும், போதைப்பொருளுக்கு அடிமையானராகவும் மாறுகிறார் ஹீரோ. இப்படி இருந்தாலும் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் சிறந்த மருத்துவர் என பெயரையும் எடுக்கிறார். மேலும்,துருவ் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது? கடைசியில் துருவ் வாழ்க்கையில் காதல் மீண்டும் கிடைத்ததா? என்பது தான் படத்தின் மீதி கதை.
மேலும்,இந்த படத்தில் துருவ் விக்ரம் வேற லெவல் நடித்திருக்கிறார்.கோபக்கார மாணவன், வெறித்தனமான காதல், நட்புக்கு இலக்கணமான நண்பன், சிறந்த மருத்துவர் என ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய நடிப்பை அழகாக காண்பித்துள்ளார். மேலும், இந்த அளவு ஒவ்வொரு காட்சிகளிலும் நடிப்பதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். படத்தின் ஒவ்வொரு எமோசனல் காட்சிகளில் அழுவதைப் பார்த்தால் நாமே அழுது விடும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. பனிதா சந்து மிக சாந்தமான, அமைதியான பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளார். கிளைமாக்சில் இவருடைய நடிப்பு வேற லெவல் என்றும் சொல்லலாம். துருவின் நெருங்கிய நண்பராக அன்புதாசன் படத்தில் நடித்துள்ளார். ‘என்ன தான் அடித்தாலும், திட்டினாலும் நண்பன் நண்பன் தான் என்று சொல்லுமளவிற்கு இவருடைய நடிப்பு இருந்தது.
பிரியா ஆனந்த் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் நடித்திருக்கிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு கடலோரக் கவிதைகள் ராஜாவும் இந்த படத்தில் நடித்துள்ளார். அதுவும் துருவின் அப்பாவாக நடித்துள்ளார். மேலும், துருவுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் துருவுக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் இருந்த இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும், 1999 இல் தமிழில் விக்ரம் நடித்த சேது படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி அர்ஜுன் ரெட்டி என்று எடுத்தார்கள். அதையே தான் தற்போது ரீமேக் செய்து ஆதித்ய வர்மா என்று வெளிவந்து உள்ளது. ரதனின் இசையில் பாடல்கல் தெறிக்க விட்டது.
பிளஸ்:
எல்லாருமே இந்த படம் துருவின் முதல் படமா!!! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. மேலும், ‘புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா’? என்று சொல்லப்படும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது.
ஆதித்ய வர்மா படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் அற்புதமாகவும், ரசிகர்களை கவரும் வைக்கும் வகையிலும் உள்ளது.
மேலும், படத்தின் நட்புக்கான இலக்கணத்தை அழகாக எடுத்துள்ளார் இயக்குனர்.
படத்தின் இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் வேற லெவல்ல உள்ளது.
மைனஸ்:
இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் வந்து பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றம் தான். ஏனென்றால் படத்தை அப்படியே ரீமேக் செய்து உள்ளதால் சுவாரசியங்கள் குறைவாக உள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக ஷாலினி பாண்டே நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஷாலினி பாண்டே என்றும் சொல்லலாம். ஆனால், தமிழில் பனிதா சந்து நடிப்பு அந்த அளவுக்கு பெரிதாக பேசப்படவில்லை. இந்த படம் முழுக்க முழுக்க ரீமேக் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஏமாற்றம் என்றும் சொல்லலாம்.
மேலும்,படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
படம் அலசல்:
உயிருக்கு உயிருக்காக காதலித்த பெண் தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற கோபத்தில் அரக்கனாக மாறிவிடுகிறார். ஜாதி திருமணத்தை எதிர்க்கும் விஷயங்கள் சூப்பராக இருந்தது. மேலும்,உணர்ச்சிமிக்க போராட்டமாக ஆதித்ய வர்மா படம் உள்ளது. பல மொழிகளில் ரீமேக் செய்த படமாக உள்ளது. மொத்தத்தில் “ஆதித்ய வர்மா வெறித்தனமான போதை காதல்”.