விக்னேஷ் சிவன்.. பிக்பாஸில் குழப்பத்தை ஏற்படுத்த! என்ன செய்தார் தெரியுமா?

0
766

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது 33வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

மகத் வாழ்த்து
இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான மகத்தும் விக்னேஷை வாழ்த்தினார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான் என்று வாழ்த்தி ட்வீட் போட்டிருந்தார் மகத். இதை பார்த்த விக்னேஷ் சிவனோ, நன்றி பிக்பாஸ் என்று பதில் ட்வீட் போட்டு அவரை கலாய்த்துள்ளார்.

யாஷிகா, ஐஸ்வர்யா நிலை…
மகத்தை பிக்பாஸ் என்றால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படாதா? மகத்தே பாவம், பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது யாஷிகாவை காதலித்து பிரச்சனையில் சிக்கினார். வெளியே வந்த பிறகு தனது காதலி பிராச்சி மிஸ்ராவை சமாதானம் செய்து காதலை புதுப்பித்துள்ளார். இந்நிலையில் அவரை போய் பிக்பாஸ் என்றால் அப்போ! ஐஸ்வர்யா நிலை என்னவாகும்..

விக்னேஷ் சிவன் திருமணம்
காதலி நயன்தாராவுடன் ஊர், ஊராக சுற்றுவது எல்லாம் சரி. அவரை எப்பொழுது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று ரசிகர்கள் அடிக்கடி விக்னேஷ் சிவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நயன்தாரா இருக்கும் பிசியை பார்த்தால் இப்போதைக்கு திருமணம் நடக்காது போன்று. விக்னேஷ் சிவனின் புதுப்பட அறிவிப்பு குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Previous articleகர்ப்பிணி அம்ருதா ஆவேசம்! அழகான வாழ்வு கொடூரமாகிவிட்டது! தந்தையை தூக்கில் போட வேண்டும்!
Next articleபெருமையாக பேஸ்புக்கில் பதிவிட்ட குற்றவாளி! இந்தியாவையே அதிரவைத்த கூட்டு துஸ்பிரயோகம்!