விக்னேஷ் சிவன் இயக்குனர் என்பதையும் தாண்டி அவர் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றார்.
போடாபோடி திரைப்படத்தின் முலமாக இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் பிரபல நடிகர்களை வைத்து அடுத்தடுத்த சூப்பர்ஹிட் திரைப்படங்களை வழங்கினார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை முன்பெல்லாம் யாருக்கும் தெரியாமலிருந்தாலும் ,நயன்தாராவுக்கு இவர் மீது கொள்ளை பிரியமாம், நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் காதல் ,நயனுடன் வெளிநாடு சுற்றுலா சென்ற விக்னேஷ் சிவன்,விக்னேஷ் நயனின் வைரல் புகைப்படங்கள் என்ற தகவல்கள் வெளிவந்ததையடுத்து இப்போது விக்னேஷ் சிவனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அப்படிப்பட்ட நம் நயன்தாராவிற்கு அதிகம் பிடித்த விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அதுவும் இருவரும் ஒரேவாறான நிறத்தில் ஆடையணிந்து தங்கள் அதீத அன்பை வெளிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை சிறப்பித்திருக்கின்றார் நம் நயன்.
இவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அனிருத், தரண்குமார் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தை கூட இயக்குவது இன்று பிறந்தநாள் கொண்டாடிய கதாநாயகன் விக்னேஷ் சிவன்தான்!




