வானில் பறந்து கொண்டிருந்த விமானம்! பெட்ரோல் டேங்குகளை கழற்றிவிட்ட விமானி! பரபரப்பு வீடியோ!

0

ஹரியாணா மாநிலத்திலுள்ள அம்பாலா விமானத்தளத்தின் அருகே, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானத்தில் விமானி ஒருவர் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பறவை அந்த விமானத்தில் மோதியது. இதனால் விமானத்தின் எஞ்சின் செயலிழந்தது, துரிதமாக செயல்பட்ட விமானி, விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்குகளையும், சிறிய வெடிகுண்டையும் தனது கண்ட்ரோல் பட்டன் மூலம் கழன்று கீழே விழச்செய்தார்.

இந்த நிகழ்வு, பல்தேவ் நகரிலுள்ள குடியிருப்பு பகுதியை கடக்கும்போது நிகழ்ந்ததால், ஒருசில பொருட்கள் வீட்டின் மேற்கூரையிலும், ஒருசில பொருட்கள் சாலையிலும் விழுந்தன.

பின்னர் தீயணைப்பு வீரர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் மூலம் நிலைமை சீர்செய்யப்பட்டது. பெட்ரோல் டேங்குகள் வெடித்து கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொதுவெளியில் பட்டப்பகலில் இளம்பெண் குத்திக்கொலை! இளைஞன் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியளிக்கும் காரணம்!
Next articleகுழந்தையை பள்ளியில் சேர்க்க சென்ற தாய்! 5 நாட்கள் தொடர் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரன்!