தமிழ் நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று தற்(கொ)லை செய்து கொண்டார்.
நடிகர் சிவாஜி கணேசனுடன் உயர்ந்த மனிதன், `வசந்த மாளிகை போன்ற படங்களிலும், கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும் நடித்தவர் வாணிஸ்ரீ. டாக்டர் கருணாகரன் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இவர்கள் இருவருமே டாக்டர்கள்தான்.
இவரின் மகன் அபிநய வெங்கடேஷ கார்த்திக் பெங்களுர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றி வந்தார். வயது 36 அவருக்கும் கல்யாணமாகி 4 வயதில் ஒரு மகனும், 8 மாசத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவியும் டாக்டர்தான். இவருடைய மனைவி, குழந்தைகளுடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார். இவரது தந்தை திருக்கழுக்குன்றத்தில் தங்கி இருக்கிறார்.
தந்தையுடன் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் கார்த்திக் தங்கி உள்ளார் தற்போது லாக்டவுனால், நுங்கம்பாக்கம் வீட்டுக்கு போகமுடியாமல் அங்கேயே இருந்துள்ளார். சில நாட்களாக குழந்தைகளை பார்க்க முடியாமல் உள்ளது என்று புலம்பி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நேரத்தில்தான் வீட்டுக்கு பின்னாடி உள்ள மரத்தில் பி(ண)மாக தொங்கி கொண்டிருந்தார்.
இது கொ(லை)யா? தற் கொ(லை)யா? என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
By: Tamilpiththan