வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சார்வரி புதுவருடம் பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேட நேரம் சுபகாரியம் செய்யும் நேரம் புத்தாடை நிறம்!
தமிழ் வருடங்களின் 34ஆவது வருடமான ‘சார்வரி’ சித்திரைப் புதுவருடமானது இன்று இரவு மலரவுள்ளது.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி: சார்வரி புதுவருடமானது இன்றிரவு 7.26 மணிக்கு பிறக்கவுள்ளது.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி: சார்வரி புதுவருடமானது இரவு 8.23 மணிக்குப் பிறக்கவுள்ளது.
நாளை காலை பொங்கல் வழிபாடு செய்யலாம்.
வாக்கியப் பஞ்சாங்கப்படி: விசு புண்ணியகாலம் பிற்பகல் 3.26 மணிமுதல் முன்னிரவு 11.26 மணி வரையிலான காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் யாவரும் மருத்துநீர் சங்கற்பித்து சிரசில் இலவமிலையும், காலில் விளாவிலையும் வைத்து ஸ்ஞானம் செய்ய வேண்டும். வெள்ளைப்பட்டாடையாயினும் வெள்ளைக்கரை அமைந்த புத்தாடையாயினும் அணிதல் நல்லது.
தோச நட்சத்திரங்களாக அஸ்வினி, கார்த்திகை 2ஆம் 3ஆம் 4ஆம் பாதங்கள், மிருகசீரிடம் 1ஆம் 2ஆம் பாதங்கள், மகம், பூரம், மூலம், உத்தராடம் 1ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்துநீர் சங்கற்பித்து ஸ்ஞானம் செய்து தான தருமம் செய்து இறைவழிபாடு செய்ய வேண்டும்.
கைவிசேடம் வியாழன் 16.04.2020 முன்னிரவு 10.37 முதல் 12.23 வரை, வெள்ளி 17.04.2020 அதிகாலை 4.17முதல் 5.47வரை, திங்கள் பிற்பகல் 12.06 முதல் 1.46 வரை நடத்தலாம்.
வித்தியாரம்பம் மற்றும் விருந்துண்ணல் என்பன 20.04.2020 பகல் 12.06 – 01.46 வரையும், 27ஆம் திகதி பகல் 12.40 – 01.18 வரையான காலப்பகுதியில் நடாத்தலாம்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி: இன்று மாலை நாழிகை 25.52 (மாலை 04.23 மணி) முதல் நள்ளிரவு நாழிகை 45.52 (இரவு 12.23 மணி) வரையும் புண்ணியகாலம் ஆகும்.
இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மருத்து நீர் வைத்து தலையில் விளாவிலையும், காலில் கடம்பமிலையும் வைத்து ஸ்நானஞ்செய்து வெண்ணிறப்பட்டாயினும் அல்லது வெள்ளைப்புது வஸ்திரமாயினும் தரிக்கலாம்.
சங்கிரம தோஷ நட்சத்திரங்களாக பரணி, கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள், பூரம், மூலம், பூராடம், உத்தராடம் 1ஆம் பாதம் ஆகியன.
இவர்கள் கட்டாயம் மருத்துநீர் வைத்து வழிபடல் அவசியமாகும்.
கைவிசேடம் திங்கள் 13.04.2020 பின்னிரவு 5.20 – 5.50 வரை, வியாழன் 16.04.2020 இரவு 07.00 – 08.00 வரை வியாழன் 16.04.2020 இரவு 10.25 – 11.30 வரை நடாத்தலாம்.
வித்தியாரம்பம் 20.04.2020 காலை 09.15 – 09.45 யும் விருந்துண்ணல் : 20.04.2020 பகல் 09.15 – 09.45 வரை 22.04.2020 மாலை 06.00 – 07.30 வரையும் இடம்பெறலாம்.