நடிகை அமலா பால் இணயத்தில் தனது புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவர் காவி லுங்கியை ஏத்திக் கட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பலரும் அவரை விமர்ச்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் லுங்கி அணிந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அமலா லுங்கியும், டி சர்ட்டும் அணிந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தனக்கு லுங்கி பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார் அமலா பால். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை கேவலமாக கலாய்த்துள்ளனர்.
புகைப்படம்
கடந்த நாட்களுக்கு முன் இரவில் லுங்கி கட்டி ஜாலியாக பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி மகிழ்ந்துள்ளார் அமலா பால். அந்த புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
என்னாச்சு?
நல்லாத் தானே இருந்தீர்கள் அமலா பால். ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்?. உடுத்த உடையே இல்லையா என்று சிலர் அவர் மீது அக்கறையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ அவரை பற்றி அசிங்கமாக கமெண்ட் போட்டுள்ளனர்.
கலாய்
அமலா பாலை லுங்கியை மடித்துக் கட்டி லுங்கி டான்ஸ் ஆடுமாறு சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். தன் உடைக்காக தன்னை யார் கலாய்த்தாலும் அதை எல்லாம் அமலா பால் கண்டுகொள்ள மாட்டார். என் உடம்பு, என் உடை, என் இஷ்டம் என்று அமலா முன்பே தெரிவித்துள்ளார்.




