126 வருடங்களாக அமெரிக்காவில் வெளிவரும் பிரபல வோக் பத்திரிகையில் இடம் பெறுவதற்கு மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ளவர்களிடையே போட்டி நிலவுவதுண்டு. மாடலிங் துறையில் இருப்பவர்கள் மட்டுமல்லாது திரைத்துறையில் இருப்பவர்களும் இந்த பத்தரிகையில் இடம் பெறுவதை பெருமையாக கருதுவர்.
இது வரையில் வட இந்தியாவில் உள்ள நடிகர்களின் படம் மாத்திரமே வோக் பத்திரிகையில் இடம்பிடித்திருந்தது.தற்போது தென்னிந்தியா பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளது.
அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட இதழில் தென்னிந்திய நடிகர்களான மகேஷ்பாபு மற்றும் துல்கர் சல்மான் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் நயன்தாராவும் இடம் பெற்றுள்ளார். தென்னிந்திய நடிகைகளில் இடம்பெற்றுள்ள ஒரே நடிகை இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து அவர் அளித்த பேட்டியும் இடம் பெற்றுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: