தமிழர் தலைநகரான திருகோணமலையின் குச்சவெளி, நிலாவெளி பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டிலிருந்து வடிசாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது குறித்த நபர் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோபாலபுரம், 10ஆம் கட்டை நிலாவெளி எனும் முகவரியை சேர்ந்த 35 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: