லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவிற்கு நேர்ந்த கதி!

0
726

லண்டனிலிருந்து நாடு கடத்தும் உத்தரவிற்கு தடை விதிக்க கோரிய விஜய் மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு மும்மரமாக உள்ளது.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளரான சாஜித் ஜாவித் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு கடந்த பெப்ரவரி மாதம் அனுமதியளித்திருந்தார்.

இந்தநிலையில் இங்கிலாந்து வெளியுறவு செயலாளரின் இந்த முடிவை எதிர்த்து விஜய் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த இங்கிலாந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதை அடுத்து விஜய் மல்லையா விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அடுத்து 6 மாதத்திற்கு பிறகே இந்த வழக்கு குறித்து மல்லையாவால் மேல் முறையீடு செய்யமுடியும் என்றும் கூறப்படுகிறது.

Previous articleஇரவு வேலைக்கு சென்ற கணவன்! மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி! நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Next articleலவ்வர்ஸ் டே அதுவுமா இந்த பொண்ணுக்கு வந்த சோதனை பாருங்க! என்னடா பரிசு இது!