ரணில் எச்சரிக்கை! இரத்தக்களறியை தடுக்கும் நேரம் கடந்துக் கொண்டிருக்கிறது!

0
345

இரத்தக்களறியை தடுக்கும் நேரம் கடந்துக்கொண்டிருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் அரசியலமைப்பை பாதித்துள்ள பிரச்சினை சில நாட்களில் தீர்க்கப்படும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்நிலைமை தொடரும் நிலையில் வன்முறைகளுக்கு செல்லவேண்டாம் என்றும் தமது கட்சி ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், வன்முறைகளில் நம்பிக்கையுள்ள சிலர் அதனை மேற்கொள்ளலாம் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleரணிலுக்கு ஆதரவாக திரண்டுள்ள மக்கள்! கொழும்பில் ஒரே நேரத்தில் இரு மாபெரும் போராட்டங்கள்!
Next articleஇலங்கையில் துண்டிக்கப்பட்ட நிலையில் தாய்லாந்து பெண்ணின் தலை!