சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும் விசாகனுக்கும் வருகிற 10ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக இன்று வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். சௌந்தர்யா பட்டுப்புடவையிலும் விசாகன் வேட்டி சட்டையிலும் இருவரும் கழுத்தில் மாலை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அதில் எதிலுமே ரஜினியின் மூத்த மருமகனான நடிகர் தனுஷ் இருப்பது போன்று இல்லை. அவரது மனைவி ஐஸ்வர்யா கூட சௌந்தர்யாவுக்கு அருகில் நின்றுள்ளார்.
இதன் உண்மை காரணம் என்னவென்றால் தனுஷ் சிறிது தாமதமாக தான் நிகழ்ச்சிக்கு வந்தாராம். அவர் வருகை தரும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.