யாழ் மயிலிட்டி துறைமுகத்தில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் கப்பல்!

0
351

மயிலிட்டி துறைமுகத்துக்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றிக்கொண்டுள்ளது. அந்தக் கப்பல் தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது. வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் கப்பல் தீப்பற்றியது என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்ற போதும், கப்பலின் இயந்திரப் பகுதி கடுமையாக தீ பற்றியதால் அங்குள்ள டீசல் தாங்கி என்பன உள்ளதால் தீ தொடர்ந்து எரிகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கப்பல் வெடிக்கும் அபாயம் உள்ளது.

திருத்த வேலை காரணமாக கடந்த ஒரு வருடமாக குறித்த கப்பல் அந்தப் பகுதியில் நங்கூரம் இடப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleகோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் என்று சொல்வது ஏன்?
Next articleபொலிஸாரினால் கொடூரமாக கொல்லப்பட்ட சகோதரன்! யாழில் தவிக்கும் இரு சகோதரிகள்!