யாழ் நோக்கி சென்ற இளைஞர்களிற்கு சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்துள்ள துயரம்!

0
453

அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதோடு பிறிதொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்.தென்மராட்சி ஏ 35 வீதியில் நாவற்குழி மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, மன்னார் வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக மின் கம்பத்துடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் கட்டப்பிராயைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயரத்தினம் பிரசாத் என்ற இளைஞர் பலியாகியுள்ளதோடு, 27 வயதுடைய குணராசன் திருக்குமரன் என்ற இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஐஸ்வர்யா ராயை ஒதுக்கிவைக்கப்படுவதற்கு காரணம் என்ன?.. வெளியே கசிந்த மற்றுமொரு ரகசியம்!
Next articleஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே!