யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்த விமான நிலையத்தை அமைப்பதற்காக 2 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இந்த விமான நிலையத்துக்கு முதலாவது பயணிகள் விமானம் இன்று வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் வாராந்தம் மூன்று விமான சேவைகளை இந்தியாவுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், நவமபர் மாதம் முதல் நாளாந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: