யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோசமான செயல்!

0
872

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய பெண்ணொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குறித்த பெண், மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

குறித்த பெண் நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது குறித்த பெண்ணை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்தநபர் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து தப்பி ஓடிய குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடிவருகின்றனர். மேலும் குறித்த நபரை கைது செய்ய திறந்த பிடியானை உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகம்பஹாவில் ஏற்பட்டுள்ள பரபரப்பு நிலை! பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு!
Next articleகருணாவால் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மாற்றம்! இன்னும் பல தகவல்கள் அம்பலம்!