யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 27 வயதான நடராஜா பிரசன்னா என்பவர் உயிரிழந்துள்ளார்.
எதிர்ப்பக்கம் வந்த காருடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
எதிராக வந்த இன்னொரு மோட்டார் வண்டிச் சாரதியும் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.