யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் கோர விபத்து! 4 பெண்கள் பரிதாபமாக பலி!

0
426

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் சிறிய கார் ஒன்று, பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர். இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் ஒருவரும் காரின் சாரதியும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

காரில் 8 பேர் பயணித்த நிலையில் சாரதியும், சிறுவன் ஒருவரும் மயிரிழையில் எந்தவிதகாயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் காரின் சாரதியை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleநான்கு ஆண்டுகளாக தன்னை காதலித்து! ஏழ்மையை காரணம் காட்டி கைவிட்ட காதலன்
Next articleகுகைக்குள் இருந்து சடலங்கள் மீட்பு!