யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையில் சித்தப்பாவினால் படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் சடலத்தை யாழ். நீதிமன்ற பதில் நீதவான் ராமகமலன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
நேரில் சென்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தடவியல் நிபுணர்களால் குறித்த பகுதியில் சோதனைகள் செய்யப்பட்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
யாழ். வண்ணார்பண்ணையில் இருந்த தனது தாயையும், சகோதரனின் மகளையும் கோடரியால் வெட்டிய நபர் தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம் இன்று காலை வேளையில் அரங்கேறியிருந்தது.
இதில் 3 வயதுடைய தனுசன் நிக்சையா என்ற குழந்தையும் உயிரிழந்திருந்தனர்.
படுகாயமடைந்த 55 வயதுடைய பலமேஷ்வரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
            