யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

0

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடன் கார் ஒன்று, மோதுண்டு பாரிய விபத்து ஏற்பட்டிருந்தது.

இந்த விபத்து காரணமாக நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

மோட்டார் வாகனம் ரயில் பாதுகாப்பு வீதியில் நுழையும் போது, வாகனத்தின் இயந்திரம் இயங்காமல் போயுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் கார் மோதுண்டு விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து காரணமாக 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாய், இரு மகள்மார் மற்றும் பேரப்பிள்ளை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ரயிலில் மோதுண்ட வாகனம் சுமார் 250 மீற்றர் தூரம் இழுத்து சென்று வீதிக்கு வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் கோர விபத்து

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் சிறிய கார் ஒன்று, பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர். இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் ஒருவரும் காரின் சாரதியும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

காரில் 8 பேர் பயணித்த நிலையில் சாரதியும், சிறுவன் ஒருவரும் மயிரிழையில் எந்தவிதகாயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் காரின் சாரதியை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleஉயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது! வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் விபத்தில் பலி!
Next articleஆயிரக்கணக்கான யுவதிகள் ஆடையின்றி பங்கேற்பு! இலங்கையை அதிர வைத்த நிர்வாண விருந்து!