யாழில் இன்று அதிகாலை நடந்த கொடூரம்! மூவர் வைத்தியசாலையில்!

0
446

யாழ். கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினரால் இன்று அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வீடு, மோட்டார்சைக்கிள் உட்பட பல பொருட்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளுக்குள் இன்று அதிகாலை நுழைந்த ஆவா குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.

இதில் வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70), செல்வராசா சஜீபன் (வயது 25) மற்றும் பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, நேற்று (05) குப்பிளான் பகுதியிலும், ஆவா குழுவினர் ஒரு வீட்டினை அடித்து சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகுலுங்கிய விமானநிலையம், தரைமட்டமான வீடுகள்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்!
Next articleநடந்தது என்ன? ஜெயிலில் அபிராமி திடீர் மயக்கம்! மருத்துவர்கள் விளக்கம்!