நம் உடலில் மோதிரம் அணியும் இடத்தில் சருமம் பச்சை நிறத்தழும்பாக‌ தோன்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

0
2430

நம் உடலில் மோதிரம் அணியும் இடத்தில் சருமம் பச்சை நிறத்தழும்பாக‌ தோன்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாகவே அணிகலன்கள் அணிந்து கொள்ளும்போது நம்முடைய தோற்றத்தில் ஒரு மாற்றம் உண்டாகி மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற அதேவேளை, மிகவும் மலிவாகக் கிடைக்கிற சில உலோகங்களாலான அணிகலன்களை அணிகின்ற போது, அதிலுள்ள ஆக்சிடைஸ் சருமத்தில் கறைகளையும் தீம்புகளையும் ஏற்படுத்தி விடுகின்றன. அத்தகைய தழும்புகள் உண்டாகாமல் இருப்பதற்கும், பச்சை நிற கறைகள் ஏற்பட்டுவிட்டால் அதனை எவ்வாறு சரிசெய்யலாம் என்பது பற்றியும் நோக்கின்;:

எந்த உலோகம்

காப்பர், ஸ்டெர்லிங்க் சில்வர் மற்றும் அலாய்டு மெட்டல் ஆகியனவற்றைத் தவிரப்பதுடன், செம்பு அணிவதாக இருந்தால்; இறுக்கமாக மோதிரமாக அணிவதனைத் தவிர்த்து கொஞ்சம் தளர்வான காப்பாக கைகளில் அணிந்து கொள்வது நல்லது.

கைகழுவும் முன்

தண்ணீரின் மூலம் சருமத்தில் ஏற்படுகின்ற ஆக்சிடேசன் காரணமாக, மோதிரங்கள் அணிந்திருந்த இடம் பச்சை நிறமாக மாறிவிடுகின்றதனால் நீச்சல் அடிக்கின்ற போதும், கைகளைக் கழுவுகின்ற போதும் கையில் உள்ள காப்பு அல்லது மோதிரத்தை கழற்றிவிடுவது நல்லது.

சோப்புகள்

கைகளில் லோஷன்கள் பூசும் போதும், சோப் மற்றும் பர்ஃபியூம்களைக் கையாளும் போதும் மோதிரங்களை அணிந்திருத்தலைத் தவிர்த்தல் நல்லது.

ஆல்கஹால்

ஒரு கொட்டன் துணியில் ஆல்கஹாலை நனைத்து, அதனை பாதிக்கப்பட்ட சருமத்தில் வைத்து மென்மையாகத் தேய்த்தல் நல்லது.

By: Tamilpiththan

Previous articleஉங்கள் முகம் பளிச்சென்ற அழகு பெற வேண்டுமா? இதோ இயற்கையான 10 அழகு குறிப்புகள்!
Next articleகுறுகிய காலத்தில் மேலதிகமான உடல் எடையை குறைத்து உடலின் அதிகப்படியான சக்கரை, உப்பு மற்றும் நச்சுக்களை அகற்றும் அற்புத பழம்!