மைத்திரி – மஹிந்தவுக்கு இடையில் மோதல் ஆரம்பம்! தீவிரமடையும் கொழும்பு அரசியல்!

0
364

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிளவுபட்டுள்ள மைத்திரி – மஹிந்த கூட்டணியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலின் போது எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்த்துக் கொள்ள ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு இடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அங்கு பொது சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கான வாய்ப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலின் போது, தாமரை மொட்டின் கீழ் போட்டியிட எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் தாமரை மொட்டுடன் இணைந்ததனை தொடர்ந்து மைத்திரி – மஹிந்த கூட்டணியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleமுறியடிக்கும் நடவடிக்கை தீவிரம்! தான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட மைத்திரி!
Next articleமைத்திரியின் குடும்பத்திற்கே காத்திருக்கும் பேரதிர்ச்சி! ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க உள்ள அதிரடி தீர்மானம்!