மோதல் நிலைமைகளைத் தவிர்த்து அமைதியைக் கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன் போது ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சில அரசியல் கட்சிகள் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.
இந்நிலையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் அமைதியைக் கடைப்பிடிப்பதுடன், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்குள் எச்சந்தர்ப்பத்திலும் வன்முறைக்கு இடமளிக்க வேண்டாமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.