இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை அஷ்னூர் கவுர். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பள்ளி படிப்பையும் ஒரு புறம் கவனித்து வந்த இவர் கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். இதன் ரிசல்ட் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து 93 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார், அஷ்னூர்.
மேலும் நான் படிப்பிலும், நடிப்பிலும் அதிக ஈடுப்பாட்டுடன் இருந்தேன். இரண்டிலும் கவனம் செலுத்தியது மிகவும் கடினமாக இருந்தது. நான் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன்.
பொதுவாக குழந்தை நட்சத்திரங்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்ற நினைத்தேன். தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன் முழு நேரமும் சூட்டிங் இருந்தது. கார் பயணத்தின் போதும், சூட்டிங் முடிந்து நள்ளிரவு 1.30 மணி முதல் 2.30 வரை கூட படித்தேன். காலையில் 5.30 மணிக்கு எல்லாம் எழுந்து கடினமாக படித்து சி.பி.எஸ்.ஐ தேர்வை எழுதினேன் என்றார் அஷ்னூர்.