முழு லூசாக மாறிப்போன பிக்பாஸ் போட்டியாளர்கள்.. பெண் வேடமிட்டு ஆரம்பித்த சண்டை..!

0
367

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுக்கு பதில் 16 பைத்தியங்களை பிக்பாஸ் வீட்டில் அடைத்துவிட்டது போல் கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் வீடே ரணகளமாகியிருந்தது. குறிப்பாக வனிதா, அபிராமி, மீராமிதுன், மதுமிதா ஆகியோர் தாங்களும் லூசுபோல் நடந்து கொண்டு பார்வையாளர்களை லூசாக மாற்றிவிடுகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண் போட்டியாளர்கள் போல் வேஷம் போட்டு இதுவரை பெண் போட்டியாளர்கள் நடந்து கொண்டது போல் நடித்து காட்டினர். குறிப்பாக ‘நான் தமிழ்ப்பொண்ணு’ என்று மதுமிதா கூறியதை போல் மோகன் வைத்யா நடித்து காட்ட அதற்கு பெண் வேடத்தில் உள்ள தர்ஷனும் கவினும் எகிற லூசுக்களின் மொத்த கூட்டமே இங்குதான் இருப்பது போல் இருந்தது இந்த முதல் புரமோ

ஆண் போட்டியாளர்களின் இந்த வேஷத்தை சிரித்து ரசித்து வருகின்றனர் பெண் போட்டியாளர்கள். எப்படியோ முதல் புரமோவில் சண்டை சச்சரவு எதுவும் இன்றி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்களே என்று சற்று நிம்மதி கொள்ள வேண்டியதுதான்…

Previous articleஈழத்து பெண் லொஸ்லியா பத்தி கலா மாஸ்டர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?..
Next articleஇன்றைய ராசிப்பலன் – 05.07.2019 வெள்ளிக்கிழமை !