முல்லைத்தீவில் குடும்ப பெண்ணிற்கு நேர்ந்த கதி!

0

ஒதியமலையை சேர்ந்த 36 வயதுடைய திலீபன் வட்சலா என்ற குடும்ப பெண் நேற்று மண்ணெண்ணை ஊற்றி எரிந்த நிலையில் உறவினர்களால் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒதியமலையில் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்ப பெண் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஓட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தற்கொலையா கொலையா என்பதில் குழப்பமுள்ளதால், பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleரசிகர்களை கலங்க வைத்த யுவராஜ் சிங்! உணர்ச்சிகர வீடியோ!
Next articleநிஜ ஜோடிகளாகவே மாறப்போகிறார்களா! திருமணம் சீரியல் ஜோடிகள்! உண்மையை கூறிய இயக்குனர்!