முல்லைத்தீவில் ஏற்பட்ட பதற்றம்! 30 பேர் கைது!

0
449

முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் நேற்று இரவு தமிழ் மீனவர்களின் படகுகள், வலைகள், வாடிகள் என்பன எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று காலை முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி கடற்தொழிலில் ஈடுபட்ட 27 வெளிமாவட்ட மீனவர்களை 8 படகுகளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அந்த வகையில் முல்லைத்தீவில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதாகிய சந்தேகநபர்கள் அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் நேற்று நள்ளிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதில், 3 படகுகள், பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள், 8 வாடிகள் மற்றும 2 இஞ்சின்கள் உள்ளிட்ட தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleகேரட் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?
Next articleஆணொருவருடன் இணைந்து வவுனியா பெண் செய்து வந்த மோசமான காரியம்!