நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொய் சொல்லி செய்த தில்லாலங்கடி வேலைகள் பிக்பாஸ் ரசிகர்களுக்கு மிக அதிக அளவு கோபத்தை உண்டாகியுள்ளது.
அதனால் ஐஸ்வர்யா வெளியேற்றப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இன்று ஐஸ்வர்யா, சென்ட்ராயன் உட்பட எலிமினேஷன் லிஸ்டில் இருந்தவர்களுக்கு எவ்வளவு வாக்குகள் பதிவானது என்ற புள்ளி விவரங்களை கமல் வெளிப்படையாக அறிவித்தார்.
ஐஸ்வர்யாவுக்கு 34 லட்சம் வாக்குகள், ஆனால் சென்றாயனுக்கு 26 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவானதாக கமல் வெளியிட்ட புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





