தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீப்பு. இந்த சீப்பு தினமும் பயன்படுவதால் தலை முடியில் உள்ள அழுக்கு, பிசுபிசுப்பு போன்றவை சீப்புகளில் ஒட்டி இருக்கும்..
இதனைக் கண்டாலே தலை சீவும் எண்ணம் நமக்கு வரவே வராது. ஆனால் அழுக்கில்லாத சீப்பு மற்றும் ஹேர் பிரஷ் பயன்படுத்த மிகவும் சுகமான உணர்வைத் தரும். தினமும் நமது தலை முடியை அழகாக்கும் சீப்பு மற்றும் ஹேர் பிரஷில் உள்ள அழுக்கைப் போக்குவது எப்படி? இதோ நாங்கள் இருக்கிறோம்..
சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷில் உள்ள அழுக்குகளைப் போக்க சில எளிய வழிகளை இந்த பதிவில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.
சுத்தம் செய்யும் முறையை தெரிந்து கொள்வதற்கு முன்னர், கூந்தல் பராமரிப்பிற்கு பொதுவாக நாம் பயன்படுத்தும் வெவ்வேறு வகையான பொருட்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
பிளாஸ்டிக் சீப்பு
பல காலமாக நாம் பிளாஸ்டிக் சீப்பை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்றைய நாட்களில் பலர் பிளாஸ்டிக் சீப்பு பயன்படுத்துவதை விரும்புவதில்லை. காரணம் இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் தலைமுடியில் சிக்கு மற்றும் வறட்சி ஏற்படுவதாக நம்புகின்றனர். அதனால் பெரும்பாலான மக்கள் நைலான் பிரஷ் பெரிய தூரிகைகள் கொண்ட மிருதுவான ஹேர் பிரஷ் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.
மர பிரஷ் அல்லது சீப்பு
மென்மையான மற்றும் நீடித்து நிற்கும் தன்மைக் கொண்ட மர பிரஷ் மற்றும் சீப்பு, இயற்கையான முறையில் உங்கள் தலை முடியை பராமரிக்க உதவுகிறது. உங்கள் தலை முடியில் உள்ள எண்ணெய் தன்மையை தலை முழுவதும் பரப்பி வேர்க்கால்கள் வரை ஊடுருவ உதவுகிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. பிளாஸ்டிக் சீப்பை ஒப்பிடும்போது இந்த மர சீப்பு தலையை அதிகமாக அழுத்துவதில்லை.
வட்டமான ஹேர் பிரஷ்
சிலிண்டர் வடிவத்தில் இருக்கும் ஒரு வகையான ஹேர் பிரஷ் முழுவதும் தூரிகைகள் கொண்டதாக உள்ளன. தலை முடியை விரித்து விடவும், கர்ல்ஸ், வேவ்ஸ் போன்ற அலங்காரம் செய்யவும் உகந்ததாக உள்ளது. இந்த வகை ஹேர் பிரஷ் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த வகை பிரஷ், தலை முடி அலங்காரத்திற்கு சிறந்த வகையில் பயன்படும்.
பேடில் ஹேர் பிரஷ்
இது பொதுவாக தட்டையாக, பெரிய மற்றும் அகலமான அடியைக் கொண்டிருக்கும் ஒரு வகை ஹேர் பிரஷ் ஆகும். இந்த வகை பிரஷ் பொதுவாக முடியின் சிக்குகளை நீக்கவும், சுருண்டிருக்கும் முடியை நேராக்கவும், முடி உடைவதைக் குறைக்கவும் பயன்படுகிறது. இந்த வகை சீப்பு மரம், பிளாஸ்டிக், செராமிக் போன்றவற்றில் செய்யப்படுகின்றன. பொதுவாக நீளமான, அடர்த்தியான நேராக இருக்கும் கூந்தலுக்கு இதனை பயன்படுத்தலாம்.
மேலே கூறிய ஹேர் பிரஷ் மற்றும் சீப்பு வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். நமது தலைமுடியை பராமரிக்கும் இந்த சீப்பு மற்றும் பிரஷ் போன்றவற்றை நாம் எப்படி பராமரிக்க வேண்டும்? எத்தனை முறை இதனை நாம் சுத்தம் செய்ய வேண்டும்? இதனைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஹேர் பிரஷ்ஷை சுத்தம் செய்வது எப்படி?
சீப்புகளை சுத்தம் செய்ய தயாராக வைத்திருக்கும் தண்ணீரில் சீப்பு மற்றும் பிரஷ்ஷை 15-20 நிமிடங்கள் ஊற விடவும். ஹேர் பிரஷ்ஷின் தூரிகை மற்றும் சீப்புகளின் பற்களில் டூத் பிரஷ் மூலம் அழுக்கை அகற்றுங்கள். ஒரு ஈர துணி மூலமாகவும் அழுக்கைப் போக்கலாம். அழுக்கை அகற்றியவுடன் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷை முழுவதும் காய வைத்து பின்பு பயன்படுத்தவும்.
சீப்பை அலசுவது, காய வைப்பது
அழுக்கை முழுவதும் அகற்றியவுடன், ஹேர் பிரஷ் அல்லது சீப்பை குழாய் நீரில் காண்பித்து நன்றாக அலசவும். பின்பு ஒரு இரவு முற்றிலும் காய விடவும். உடனடியாக சீப்பை பயன்படுத்த விரும்புபவர்கள், ஒரு காய்ந்த டவலால் நன்றாக துடைத்து பின்பு பயன்படுத்தலாம் அல்லது ட்ரையர் பயன்படுத்தி சீப்பை காய வைக்கலாம்.
இதனால் அதில் உள்ள ஈரம் முற்றிலும் காணமல் போய்விடும். இந்த முதல் நிலை சுத்திகரிப்பை வாரம் ஒரு முறை செய்வது உங்கள் கூந்தல் பராமரிப்பு பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும். இது மிகவும் அவசியமும் கூட. பல நாட்கள் இந்த முறையில் சுத்தம் செய்யாமல் விடும்போது, இன்னும் ஆழ்ந்த சுத்தம் தேவைப்படும்.
ஹேர் பிரஷ் சுத்தம் செய்வது எப்படி?
அழுக்கை முழுமையாக நீக்கியவுடன் அந்த சீப்பு அல்லது பிரஷ்ஷை குழாய் நீரில் கழுவவும். காய்ந்த டவல் அல்லது ட்ரையர் மூலம் சீப்பை காய வைக்கவும். சீப்பு மற்றும் பிரஷ்ஷை சுத்தம் செய்யும் போது அவற்றின் கைப்பிடியை சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். பேடில் பிரஷ் அல்லது மர பிரஷ்ஷை சுத்தம் செய்யும்போது பிளாஸ்டிக் சீப்பை போல் சுத்தம் செய்யக்கூடாது. அவற்றை சுத்தம் செய்வதில் தனிக்கவனம் செலுத்துவது அவசியம்.
கவனிக்க வேண்டியது
மர பிரஷ் அல்லது பேடில் பிரஷ் சுத்தம் செய்யும்போது, நீரில் பிரஷ்ஷை முழுவதும் ஊற வைக்கக் கூடாது. தூரிகைகள் மட்டும் நீரில் படும்படி சில நிமிடங்கள் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ஊற வைக்கவும். மென்மையாக சுத்தம் செய்வதன் மூலம் சேதம் மற்றும் உடைவது தடுக்கப்படும்.




