தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக வவுனியா நகர் பகுதி எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகளில் “உச்ச துரோகத்தின் குறியீடு” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, “இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம்” எனும் தலைப்பில் சுமந்திரனை விமர்சித்து அண்மையில் முல்லைத்தீவு நகரிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.