மீண்டும் இயக்குனராகும் ராமராஜன் – ஹீரோ யார்?
ராமராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாது அரசியல்வாதியும்கூட இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 80 ல் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குனராக களமிறங்குகிறார்.
ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர். ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் ராமராஜன் கதாநாயகனாக அறிமுகமாகி மொத்தம் 44 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் அனைதும் வெற்றி படங்களாகவே அமைந்தன. அத்தோடு ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மருதாணி, மறக்கமாட்டேன், ஹலோ யார் பேசுறது, என பல படங்களை டைரக் செய்தார்.
இந்த வகையில் நீண்ட ஒரு இடைவெளிக்குப்பின், ராமராஜன் மீண்டும் டைரக் செய்ய இருக்கிறார். முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய்சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி அவரை வைத்து இயக்க இருக்கிறார்.இதற்கு விஜய்சேதுபதி நடிக்க சம்மதித்தும் இருக்கிறார்.
By: Tamilpiththan