மாற்றுத்திறனாளி மகனுடன் வறுமையில் வாழும் நடிகை பரவை முனியம்மா! கண்ணீருடன் விடுத்த முக்கிய கோரிக்கை!

0
3075

சினிமாவில் புகழ்பெற்ற நடிகையும் நாட்டுப்புற பாடகருமான பரவை முனியம்மா தனது ஆறாவது மகனுக்காக தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அண்மையில் தமிழக அரசின் சார்பில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொது எனக்கு நிரந்தர வைப்பு நிதியாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலமாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டு அத்தொகைக்கு மாதம் ரூ. 6000 வட்டி வருகிறது அதை வைத்துத்தான் நான் குடும்பம் நடத்தி வருகிறேன்.

என் இறப்புக்கு பிறகு என் ஆறாவது பிள்ளை மாற்றுத்திறனாளி மகனுக்கு அத்தொகையை வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இப்படியொரு கோரிக்கையை முன் வைத்துள்ளது தமிழக மக்களையே மனமுருக வைத்திருக்கிறது. அது மாத்திரம் இன்றி, அவருக்கு உதவ வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, எனக்கு படவாயப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் எனக்கு நடிக்க உடம்பு ஒத்துளைக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.

Previous articleமெரினா பீச்சில் கரை ஒதுங்கிய 3 சடலங்கள்! அதிர்ச்சியில் மக்கள்!
Next articleஓவியா ஆர்மியை காலி பண்ணிய ஓவியா!