மாமனாரின் பகீர் வாக்குமூலம்…! இதற்காகத்தான் மருமகனை ஆணவக்கொலை செய்திருக்கிறார்!

0
465

தெலுங்கானாவில் தனது மருமகனை ஆணவக்கொலை செய்ய மாமனார் ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்க முன்வந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிக தொகை பேரம் பேசப்பட்டு நடந்த ஆணவக்கொலை இது என்று கருதப்படுகிறது. இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடாவைச் சேர்ந்தவர் மாருதிராவ். அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது ஒரே மகள் அமிர்தவர்ஷினி. ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் மிரியாலகுடாவைச் சேர்ந்த பிரணாய் நாயக் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த 13-ம் தேதி (விநாயக சதுர்த்தியன்று) பிரணாய் நாயக்கும், அமிர்தவர்ஷினியும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தபோது, பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத நபர், பிரணாயின் தலையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினார். இந்த வழக்கில், அமிர்தவர்ஷினியின் தந்தை மாருதிராவை பொலிசார் கைது செய்தனர்.

மாமனார் வாக்கு மூலம்..!
மேலும் அவர் அளித்த தகவலின்படி, பீகார் மற்றும் ஹைதராபாத்தில், மொத்தம் 8 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், தனது மகள் அவரை விட அந்தஸ்தில் குறைவான பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்தது பிடிக்காததால், கூலிப்படை மூலம் மருமகனைக் கொலை செய்ததாக மாருதிராவ் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தக் கொலைக்காக, ஒன்றரைக் கோடி ரூபாய் தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவிலேயே மிக அதிக தொகைக்காக நடந்த ஆணவக்கொலையாக இந்த சம்பவம் இடம்பெற்றுவிட்டது.

தற்போது, இந்த கொலை தொடர்பாக மாருதிராவ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleகல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞன்! தொந்தரவு தாங்க முடியாமல் பெண் எடுத்த அதிரடி முடிவு!
Next articleகண்கலங்க வைக்கும் சம்பவம்..! சடலத்துடன் ஆற்றை கடந்த பொதுமக்கள்!