பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், மக்களின் பேராதரவோடு அதிக வாக்குகளைப் பெற்று டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் மலேசியா பாப் பாடகர் முகேன்.
ஆரம்பத்திலிருந்து நடுநிலையாக விளையாடி வந்த இவர் பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் வெற்றி பெற்றார். இந்தியாவில் தனது வெற்றிக்கொண்டாட்டத்தினை முடிந்த முகேன் நேற்றைய தினத்தில் மலேசியா கிளம்பினார்.
தற்போது மலேசியா சென்ற முகேனுக்கு அங்குள்ள ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அவரை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சிறுமி ஒருவர் முகேன் பிக்பாஸ் வீட்டிற்குள் பாடிய பாடலைப் பாடி முகேனையே பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: