மற்ற ஆண்களுடன் நெருக்கமாக இருந்த காதலி – காதலன் எடுத்த விபரீத முடிவு!

0
515

தனது காதலி மற்ற ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதை தெரிந்து கொண்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள உயர் தர சலூன் கடையில் பணிபுரிந்து வந்தவர் ஷோபித் சிங். இவர் கடந்த மாதம் 13ம் தேதி மாயமானர். எனவே, அவரது நண்பர்கள் மற்றும் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து அவரது நண்பர் ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், தான் மிகவும் உருகி நேசித்த தன் காதலி, வேறு ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார். இதைக்கேட்ட போது என் காதலியும், அந்த இரு ஆண்களும் என்னை தாக்கினர்.

மேலும், நான் என் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டது போல் பேச வைத்து வீடியோ எடுத்து வைத்து போலீசாரிடம் புகார் அளிப்பதாக என்னை மிரட்டினர். எனவே, நான் தற்கொலை செய்கிறேன்.

என் மரணத்திற்கு என் காதலியும், இரு ஆண்களுமே காரணம் எனக்கூறி அவர்களின் பெயர்களையும் ஷோபித் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த கடிதத்தை ஷோபித் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி அழுகிய நிலையில் அவரின் உடலை அந்தேரி மேற்கு பகுதியில் அமைந்துள்ள அம்போலி எனும் இடத்தில் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleபவர் ரேஞ்சரில் ரெட் ரேஞ்சராக நடித்த நடிகர் திடீர் மரணம்!
Next articleவெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா! தெரிஞ்சிக்கங்க!