மருமகள் சமந்தா போல் படு மாடர்னாக மாறிய மாமியார் அமலா! இணையத்தில் பரவி வரும் புகைப்படம்!

0
377

தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அமலா. இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான “மைதிலி என்னை காதலி’ என்கிற படத்தில் அறிமுகமாகி, ரஜினி, கமல், மோகன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனாவுடன் நடித்த போது, அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர், பல வருடங்கள் கழித்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘உயிர் மெய்’ என்கிற சீரியலில் மருத்துவராக நடித்தார்.

நாகர்ஜூனாவின் முதல் மனைவி மகன், நாகசைதன்யாவையும் தன்னுடைய மகன் அகில்கிலையும் இவர் ஏப்போதும் பிரிந்து பார்த்தது இல்லை. இவரின் இரண்டு மகன்களும் தற்போது தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களாக உள்ளனர்.

நாகசைத்தன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னணி நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தாவும் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது வித விதமான மாடர்ன் உடைகளை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

அமலாவின் மாடர்ன்

இந்நிலையில் சமந்தாவின் மாமியார் அமலாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் மிகவும் மாடர்னாக உள்ளார். 80 களில் முன்னணி நடிகையாக நடித்தாலும், மருமகளுக்கு இணையாக உடை அணிந்துள்ளார் அமலா. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தற்போதும் இளமையாக இருக்கிறீர்கள் என கூறி அமலாவை முகம் சிவக்க வைத்துள்ளனர்.

Previous articleபொடுகை போக்க காட்டில் கணவருடன் பெண் செய்த முகம்சுழிக்கும் காரியம்! நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க!
Next articleராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ்-ஆல்யா மானசாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- கல்யாண கோலத்தில் புகைப்படம் இதோ!