இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் பிறப்புறுப்பில் இருந்து அட்டைப் புழு ஒன்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேரளாவின் ஆலப்புழா பகுதியில் இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டு வந்துள்ளது.
வலியால் அந்த இளைஞர் துடித்துப் போயுள்ளார். ஒரு கட்டத்தில் தம்மால் இனி பொறுக்க முடியாது என கருதிய அவர் மருத்துவரை நாடியுள்ளார்.
மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில் அந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது பிறப்புறுப்பில் மலைப் பிரதேசங்களில் மட்டும் காணப்படும் ஒருவகை அட்டைப் புழு நுழைந்துள்ளது மருத்துவர்களால் கண்டறிந்துள்ளனர்.
சமீபத்தில் அவர் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளார். அந்த குளத்தில் வைத்து நூலிழை அளவுக்கு மட்டுமே இருந்த அந்த அட்டை அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் புகுந்துள்ளது.
அது தற்போது ரத்தம் குடித்து 7 செ.மீ அளவுக்கு வளர்ந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் உரிய கருவிகளை பயன்படுத்தி அந்த அட்டையை வெளியே எடுத்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சை அளித்து இளைஞரை குணப்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.