மருத்துவமனைக்கு வந்த நோயாளியை அடித்து கொடுமைப்படுத்திய டாக்டர்! வெளியான அதிர்ச்சி காணொளி!

0

ராஜஸ்தானில் சிகிச்சை பெற வந்த நோயாளியை மருத்துவர் ஒருவர் சரமாரியாக அடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நோயாளிகளை கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை பார்ப்பவர்கள், ஒரு உயிரை காப்பாற்றும் வாய்ப்பு கடவுளுக்கு அடுத்தப்படியாக மருத்துவர்களுக்கே கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம். பிறப்பு, இறப்பு இரண்டையும் பார்க்கும் மருத்துவ சேவை எப்போதுமே போற்றுதலுக்கு உரியது தான்.

ஆனால் சில மருத்துவர்கள் அந்த கடமையை உணர்ந்து சரியாக செயல்படுகிறார்களா? என்றால் அது கேள்விக்குறி தான். ஒட்டு மொத்த எல்லா மருத்துவர்களையும் அந்த லிஸ்டில் சேர்த்து விட முடியாது. ஆனால் இதுப்போன்ற சில மருத்துவர்களால் மருத்துவ துறைக்கே அவப்பெயர் வந்து விடுகிறது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். நோயாளியைத் தள்ளிவிட்டு மருத்துவமனை கட்டில் மீது ஏறி அந்த மருத்துவர் அவரைத் தொடர்ந்து அடிக்கிருக்கிறார். மற்ற நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் அதைப் பார்த்துக் கொண்டே சுற்றி வேடிக்கை பார்த்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண் டாக்டரை கற்பழிக்க முயன்ற வாலிபர்! ஆத்திரத்தில் பெண் செய்த அதிர்ச்சி செயல்!
Next articleஉலகில் முதல் முறையாக அமைக்கப்பட்ட 360 டிகிரி நீச்சல் குளம்! எங்கு தெரியுமா! வைரல் புகைப்படம்!