மன்னாரில் கிணற்றுக்குள் மறைந்திருந்த அதிர்ச்சி!

0

மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோரமோட்டை பகுதியில் யுத்த காலத்தின்போது கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமை துப்பரவு செய்துள்ளார்.

குறித்த காணியில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் போது அந்தக் கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மிகவும் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றுக்குள் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

அனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதோடு, உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

மன்னார் நீதிமன்னத்தின் அனுமதியோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) மாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த கிணற்றினுள் உள்ள அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநெட்டிசன்களுக்கு சோனாலியின் கணவர் வேண்டுகோள்! காதலர் தினம் நடிகை சோனாலிக்கு என்ன நடந்தது..?
Next articleஉங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?