Home thatstamil one india tamil oneindia tamil மனைவியை கொளுத்திய‌ கணவன்! காப்பாற்றும் படி கெஞ்சியதாக தம்பி கண்ணீர்!

மனைவியை கொளுத்திய‌ கணவன்! காப்பாற்றும் படி கெஞ்சியதாக தம்பி கண்ணீர்!

0
523

தமிழகத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்துவிட்டு, குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறும் படி கணவன் சொல்லியிருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அழகாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு பூமதி(24) என்ற மனைவியும், பூவரசன்(5) என்ற மகனும், நிலாஸ்ரீ என்ற இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 18-ஆம் திகதி வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பி வந்த கார்த்திக், தன் மனைவி பூமதி குழந்தைகள் பூவரசன், நிலாஸ்ரீ ஆகியோர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

இதில் தீக்காயமடைந்த மூன்று பேரும் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பூமதியும் அவரின் பெண் குழந்தை நிலாஸ்ரீயும் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர்.

பூவரசன் உயிருக்குப் போராடி வருகிறான். கார்த்திக் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பூமதியின் தம்பி நடராஜன் கூறுகையில், கார்த்திக் ரிக்வண்டிக்கு சென்றுவிட்டு, மூன்று மாதம் கழித்து தான் வீட்டுக்கு வருவான்.

அப்படி வீட்டுக்கு வரும் போது எல்லாம், குடிச்சுட்டு தான் வருவான், அப்போது என் அக்கா, குழந்தைகளை கண்மூடித்தனமாக அடிப்பான்.

இப்படி தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே தான் இருப்பான். கடந்த நான்கு, ஐந்து நாட்களாக எங்க அக்கா மற்றும் குழந்தைகளை அடிச்சு கொடுமை பண்ணிருக்கான்.

நாங்க அக்கவோட போனுக்கு கால் பண்ணிக்கிட்டே இருந்தோம், ஆனால் அவளோட போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது. அதன் பின் கார்த்திக்கிற்கு போன் பண்ணி கேட்டால், நான் வெளியூரில் இருக்கேன் என்று சொன்னார்.

அவர்களை தீ வைத்து எரித்த பின்னர் தான், எங்களுக்கு போன் பண்ணி அவர் விஷயத்தை கூறினார். அதன் பின் மருத்துவமனையில் நானும் ஏன் அம்மாவும் என் இப்படி பண்ணுனா என்று கேட்ட போது, அடிச்சு கொடுமை படுத்தி அவர் தான் தீ வச்சு கொளுத்தினாரு, மருத்துவமனையில் யாராவது கேட்டால், தற்கொலை செஞ்சுக்க தீ வச்சு கொளுத்திக்கிட்டோம் என்று சொல்லும் படி சொன்னார்.

இந்த ஒரு முறை மட்டும் என்னை காப்பாற்றுங்க, நான் உங்க கூட வந்துவிடுகிறேன். இனி நான் அங்கு போகவில்லை என்று கதறி அழுதாள். அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் போட்ட பின்னர் தான் காவல்துறையினர் அக்காவிடம் விசாரணை நடத்தி அவனை கைது செய்தார்கள்.

அங்கு அருகில் இருப்பவர்கள் யாரேனும் ஒருவர் எங்களுக்கு தகவல் கொடுத்திருந்தால், நாங்கள் எங்க அக்காவையும், குழந்தையும் காப்பாற்றியிருப்போம் என்று கண்ணீர்விட்டார்.

Previous articleபிக்பாஸ் வீட்டிற்கு வந்த நித்யா ஐஸ்வர்யாவிடம் என்ன கேட்டார் தெரியுமா?
Next articleபிக்பாஸ் வாக்குப்பதிவில் தற்போது முன்னிலையில் இருப்பது யார்?