மனைவியின் தங்கை மீது ஆசை! ஏமாற்றி கர்ப்பமாக்கிய கொழுந்தன்! சிக்கியது எப்படி!

0

தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் கட்டிட காண்ட்ராக்டர் அய்யப்பன். இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கேரளாவில் புதிதாக கட்டிட காண்டிராக்ட் வேலை எடுத்து செய்து வந்த அய்யப்பனுக்கு வருமானம் அதிகமாக வந்த நிலையில், தனது குடும்பத்தை விட தனது மனைவியின் குடும்பத்தை தனி கவனம் செலுத்தி கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மனைவியின் தங்கையான 10 ஆம் வகுப்பு மாணவியை அழைத்துக் கொண்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அய்யப்பன், காதலனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து விட்டதாகக் கூறி கருக்கலைப்பு செய்யக் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு வருவதை அறிந்த அய்யப்பன், அந்த சிறுமியை தவிக்கவிட்டு தப்பிச்சென்றார்.

மாணவியிடம் விசாரித்த போது, அக்காள் கணவரான அய்யப்பன் 6 மாதங்களாக அவரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

பலாத்காரத்துக்கு உள்ளாகி கர்ப்பமான மாணவி, அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை ஒருதலையாகக் காதலித்துள்ளார். இதனை தன்னிடம் சகஜமாக பேசிப் பழகிய அக்காள் கணவர் அய்யப்பனிடமும் தெரிவித்துள்ளார்.

அய்யப்பனும் காதலுக்கு உதவுவது போல நடித்து, அந்த மாணவியிடம் நெருக்கம் காட்டி உள்ளார். ஒருநாள் காதலன் அழைத்ததாகக் கூறி தனிமையான இடத்திற்கு சிறுமியுடன் சென்ற ஐயப்பன், அங்கு வைத்து மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின்னர், கடந்த 6 மாதங்களாக அந்த மாணவியிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் கர்ப்பமானதாக கூறியதால் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார். அப்போது மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனைக்கு சென்றால் லஞ்சப்பணம் கொடுத்து எளிதாக கருக்கலைப்பு செய்து விடலாம் என்ற எண்ணத்தில் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்த தகவலால் அய்யப்பன் சிக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அய்யப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவேகமாகச் சென்ற காரிலிருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன்! அதிர வைக்கும் காரணம்!
Next articleஇவரை தான் காதலிக்கிறேன்! போட்டோ வெளியிட்ட அமீர் கான் மகள்! அதிர்ச்சியில் சினிமா துறையினர்!