இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் மனைவியுடன் வீடியோ கால் பேசியபடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சித் (32) என்பவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
மனைவியுடன் ரஞ்சித் வசித்து வந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக அவரை பிரிந்த மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
மனைவி பிரிவால் வாடிய ரஞ்சித் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் அவருக்கு வீடியோ கால் பேசியுள்ளார்.
போனில் உருக்கமாக ஏன் என்னை பிரிந்து சென்றாய் என பேசிய ரஞ்சித் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ரஞ்சித்தின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
அவரின் செல்போனை பரிசோதனை செய்யும் பணி நடந்து வரும் வேளையில், ரஞ்சித்தின் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் பொலிசார் விசாரிக்கவுள்ளனர்