அலரி மாளிகைக்கு பெருந்தொகையான மக்கள் தற்பொழுது படையெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இளைஞர், யுவதிகள் மற்றும் பெரியவர்கள் என வயது பேதமின்று அலரி மாளிகை வளாகத்திற்கு பெருந்திரளானவர்கள் வருகை தருவதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






