மக்களுக்கு ஓர் முன்னெச்சரிக்கை! யாழில் பரவலாக காணப்படும் கள்ள நோட்டுக்கள்!

0
463

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றில் கள்ள நோட்டுக்களை வைத்து பொருட்களை வாங்குவதற்கு இரண்டு இளைஞர்கள் முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வர்த்தகர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது

இதன் போது அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் இருபத்தியோராயிரம் ரூபா பெறுமதியான கள்ள நோட்டுக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை யாழிலுள்ள பால்பொருட்கள் வர்த்தக நிலையத்தில் ஐந்தாயிரம் ரூபா கள்ள நோட்டை வைத்து பொருள் வாங்க முற்பட்ட ஒருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Previous articleநெஞ்சை கனக்க வைக்கும் சம்பவம்! கிணற்றில் இருந்து 5 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு!
Next articleஅதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை! மனைவியை வைத்துக்கொண்டு என்னிடம் அப்படி நடந்துக்கொண்டார் ஹிரித்திக் ரோஷன்!