மகிழ்ச்சியில் இலங்கை மக்கள் !கடுமையாக்கப்படும் சட்டம்!

0
741

ரயில் வீதிகளில் நுழைபவர்கள் மற்றும் அதில் பயணிப்பவர்கள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்டத்தை கடுமையாக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ரயில் வீதிகளில் பயணிப்பதனால் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பேர் பலியாகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றும் இரண்டு பாடசாலை மாணவர்கள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே சமிக்ஞை சட்டத்தை மீறி யாரும் செயற்பட வேண்டாம் என ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில்வே சட்டத்தை சரியாக பின்பன்றினால் உயிரிழப்புக்களை தவிர்க்க முடியும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் இருவர் மிகவும் பிரபலமான எல்ல பாலத்திற்கு வெளியே தொங்கிய நிலையில் முத்தம் கொடுத்த புகைப்படம் பாரிய சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளமான இன்ஸ்ட்ராகிராமில் அதிக விருப்பங்களை பெற்றுக்கொள்ளும் இவ்வாறு செயற்பட்டதாக பிரித்தானியா ஊடகம் ஒன்று கடுமையாக விமர்சித்ததது. எனினும் சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்திற்கு 40000 விரும்பங்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரயில்வே சட்டத்தை மேலும் கடமையாக்கும் செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். பலர் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதால் விலைமதிப்பற்ற உயிர் பரிதாபமாக இழக்கப்படுவதாக பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

ரயில்வே தொடர்பில் கடுமையாக்கப்படும் சட்டம் உயிரிழப்புக்களை தவிர்க்கும் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Previous articleசென்னை விமான நிலையத்திற்கு சிவப்பு எச்சரிக்கை! கொழும்பு தொடர்பில்.
Next articleபரிசோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ! 8 வயது சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த பொருள் !