மகளை பாலியல் தொந்தரவு செய்ய உடந்தையாக இருந்த தாய்? கிளிநொச்சியில் சம்பவம்!

0
538

மகளை பாலியல் தொந்தரவு செய்ய உடந்தையாக இருந்த தாய்? கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சியில் பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில்நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் சிறுமி ஒருவரை பொலிஸ் அதிகாரியெருவர் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்த உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் குறித்த பெண் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

சிறுமியின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் செய்த முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசாராய வெறியில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்குள்ளான யுவதிகள்!! அதிர்ச்சித் தகவல் இதோ
Next articleஒரு ரூபாய்க்கு சாராயம்!யூலி அதிரடி அறிவிப்பு!அதிர்ச்சியில் உலகம்!